Categories
அரசியல்

“கட்டப்பஞ்சாயத்து கவுன்சிலர்கள் வேண்டாம்…!” அண்ணாமலை ஆவேச பேச்சு…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபெறவிருக்கும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக முதல்வர் நேரில் சென்று பிரச்சாரம் செய்யாமல் அவரது அறையில் இருந்து கொண்டு கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து பிரச்சாரம் செய்கிறார். ஒரு தேர்தலில் முதல்வர் நேரில் வந்து பிரச்சாரம் செய்யாதது இதுவே முதல் முறையாக இருக்கும். ஏனென்றால் நேரில் வந்தால் எமது சகோதரிகள் குடும்பத் தலைவிக்கு கொடுப்பதாக கூறிய ஆயிரம் ரூபாய் பணம் எங்கே? கேஸ் சிலிண்டருக்கான மானியம் எங்கே? என கேள்வி கேட்பார்கள் என்பதற்கு பயந்து போய் முதல்வர் கம்ப்யூட்டர்

முன்னால் அமர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறார். இதெல்லாம் ஒரு நல்லாட்சிக்கு அழகல்ல நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் கட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இடமிருந்து தப்பித்து நல்லாட்சி அமைய இது ஒரு வாய்ப்பாக இருக்கும். கட்டப்பஞ்சாயத்து கிடையாது. நில அபகரிப்பு கிடையாது. எந்த ரவுடிசம் கிடையாது பாஜகவிற்கு வாக்களியுங்கள் மக்களே.!” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |