மியான்மரில் இருந்து காவல்துறையினர் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது.இந்த தாக்குதலை கண்டித்து அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு காவல்துறையினர் 3 பேர் இந்திய மாநிலமான மிசோரமில் எல்லையை தாண்டி வந்துள்ளனர்.
இதனை அறிந்த மாநில காவல்துறையினர் அவர்களை இரு நாட்டு எல்லையில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள லங்கா கிராமத்தில் பிடித்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்தபோது தாங்கள் மியான்மர் இராணுவம் இட்ட கட்டளைகளை மீறியதால் அவர்களை அந்நாட்டு ராணுவம் தேடுவதாக தெரிவித்துள்ளனர். எனவே தான் தாங்கள் எல்லைதாண்டி வந்ததாகவும் இந்தியாவிடம் அடைக்கலம் பெற விரும்புவதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.