Categories
மாநில செய்திகள்

“கட்டாயத்தின் பேரில் வருவதா காதல்”?…. சமூக அக்கறை எங்கே உள்ளது?….. நெஞ்சை பதற வைக்கும் உயிர் பலி…..!!!!!

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் மூன்று நபர்களால் கட்டாயப்படுத்தி விஷம் அருந்த வைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நூற்று வயல் புதூரை சேர்ந்த வித்யா லட்சுமி என்பவர் தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது தாய் சாந்தி பெல்ட் காவல் நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலிக்க சொல்லி இளைஞர் ஒருவர் வற்புறுத்தியதாகவும், அதற்கு இந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் கட்டாயப்படுத்தி விஷம் அருந்த வைத்ததாகவும் தகவல் கிடைத்துள்ள.து இந்த சம்பவம் தொடர்பாக பல இடங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மக்கள் நீதி மையம் சார்பில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து ட்விட்டரில் கூறியுள்ளதாவது “இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காதல் என்பது கட்டாயத்தின் பேரில் வராது. சாதிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கும்போது காதலுக்காக கொலையும், தற்கொலையும் செய்வது சரியல்ல. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

வளரும் நாடுகளும் மக்களும் தொழில்நுட்ப மட்டுமன்றி சிந்தனைகளிலும் முன்னோக்கி வருகின்றனர். ஆனால் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒருபக்கம் பெண்களின் முன்னேற்றத்திற்காக பேசிக் கொண்டிருக்கின்றோம். மற்றொரு பக்கம் அந்தப் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறோம். வாழ்க்கையில் மிக இளம் பருவத்தில் காதலுக்காக ஒரு பொண்ணைப் பொதுவெளியில் கொலை செய்யத் துணியும் இதுபோன்ற செயல்கள் தனிமனிதனின் ஒழுக்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சமூக எதிர்காலத்திற்கும் ஒரு பெரும் கேள்விக்குறியாக மாறும். இது போன்ற நெஞ்சை உலுக்கும் உயிர் பலிகளுக்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறாமல் சமுதாயமும் தங்கள் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |