Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…. தம்பதியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டுவந்தாங்கள் கிராமத்தில் வரதராஜுலு -தனலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனலட்சுமி வீட்டில் உள்ள கழிவறையில் திடீரென வழுக்கி  விழுந்தார். இதில் படுகாயமடைந்து தனலட்சுமியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த வரதராஜுலு, தனலட்சுமி ஆகிய 2 பேரும் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த 2  பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர்களை  பரிசோதித்த மருத்துவர் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |