ரஷியா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷியா கடந்த 6 மாதங்களாக தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் ரஷிய படைகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இதனால் சில இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நகரங்கள் இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. அவை மீண்டும் சரி செய்யப்பட்டது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது. ரஷியா கைப்பற்றிய 6 ஆயிரம் சதுர கி.மீ பகுதிகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பகுதியில் உக்ரைன் படைகள் ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு இழந்த பகுதிகளை பெருமளவில் மீட்டு வருகின்றது.
செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் 6000 சதுர கி.மீ பரப்பளவை எங்களுடைய படைகள் மீட்டுள்ளது. தொடர்ந்து நாங்கள் முன்னேறி வருகிறோம். இந்த நடவடிக்கையில் ரஷ்ய படை வீரர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். ரஷியாவுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். மேலும் போர் கைதிகள் அதிகளவில் உள்ளனர் அவர்களை தங்க வைக்கப் போதிய இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.