கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ள கனடா அரசுக்கு எதிராக லாரி டிரைவர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
கனடாவில் லாரி ஓட்டுனர்கள் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, தலைநகர் ஒட்டவாவில் கடந்த சனிக்கிழமை முதல் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது 1000-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் தங்கள் வாகனங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் பொதுமக்களை மிரட்டி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக போராட்டக்காரர்கள் 2 பேரை கைது செய்ததாக ஒட்டாவா காவல்துறை கூறியுள்ளது. இந்தப் போராட்டங்கள் மேலும் வலுப்பெறுவதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவர் குடும்பத்தினர்கள் பாதுகாப்பான மற்றும் ரகசியமான இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.