தமிழ் திரையுலகில் நடிகை பிரியாமணி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரியாமணி டைரக்டர் பாரதிராஜா மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர் பருத்தி வீரன், மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் தனது திறமையை படத்தில் காட்டியுள்ளார். இவ்வாறு இருக்க தமிழ் திரையுலகில் பிரியாமணி கடைசியாக 2012 ஆம் ஆண்டு சாருலதா படத்தில் நடித்துள்ளார்.
அதன் பின்பு பிரியாமணி தமிழ்த்திரையுலகில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு தற்போது அவர் அறம் படத்தில் நயன்தாரா நடித்திருப்பது போன்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதற்காக கதைகளை தொடர்ந்து கேட்டு வருவதாகவும் நல்ல வாய்ப்பு வந்ததும் தமிழில் நிச்சயம் மறுபிரவேசம் செய்வேன் என்றும் பிரியாமணி கூறியுள்ளார்.