நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்ஆந்திராவில் அதிக அளவு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கட்டாய ஆங்கில வழி கல்வியை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்க life skill courseஅறிமுகப்படுத்த உள்ளதாகவும் அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.
Categories