Categories
தேசிய செய்திகள்

“கட்டாய ராணுவ சேவை அளிக்கும் திட்டமில்லை” ….. மத்திய அரசு விளக்கம்…..!!!!

இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனங்களுக்கான திட்டம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு அக்னி பத் யோஜனா என மத்திய அரசு பெயரிட்டது.இந்த திட்டத்தின் படி அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படும் இளைஞர்கள் நான்கு வருடங்களுக்கு ராணுவத்தில் பணியாற்றுவார்கள்.இந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு நான்கு வருடங்கள் கழித்து இந்திய ராணுவத்தில் மேலும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். மீதம் உள்ளவர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இந்தத் திட்டத்தால் இந்தியாவில் முதல்முறையாக ராணுவத்தில் இளைஞர்கள் குறுகிய காலத்திற்கு பணியமர்த்தப்பட உள்ளனர். இதனிடையே ராணுவத்தில் இத்தகைய ஆள் சேர்ப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை வழங்கும் திட்டம் ஏதுமில்லை என மத்திய அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள்உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆள் சேர்ப்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.ஆயுதப்படைகளில் இளைஞர்கள் கட்டாயம் சேருவதற்காக மத்திய அரசு எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |