Categories
சினிமா விமர்சனம்

கட்டா குஸ்தி திரைப்படத்தின் விமர்சனம்…. இதோ ஒரு சுவாரசியமான தொகுப்பு…..!!!!!

கட்டா குஸ்தி படத்தின் திரை விமர்சனம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

கேரள மாநிலத்தில் பிரபலமான கட்டா குஸ்தி விளையாட்டில் சிறந்த வீராக மாற முயற்சிக்கிறார் முனிஸ் காந்த். அப்போது இதற்கு இவருடைய உடல் ஒத்துழைக்காததால் அதை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார். இதற்கிடையில் இவரின் பயற்சியையும் இவர் சென்றுவரும் போட்டிகளையும் கூர்ந்து கவனித்து சிறு வயதில் இருந்து வளர்ந்து வருகிறார் ஐஷ்வர்யா லக்ஷ்மி. இதையடுத்து அவரது ஈடுபாடால் கட்டா குஸ்தியில் வீரராக மாறுவார். பின் தன்னுடைய தங்கையை வம்புக்கிழுக்கும் சில ஆண்களை நடுரோட்டில் வைத்து அடித்து துவைக்கிறார்.

இதனிடையில் பெண் பார்ப்பதற்காக வரக்கூடிய ஆண்கள் இவர் ஒரு குஸ்திவீரர் என்ற காரணத்தினால் தட்டிக்கழித்து விடுகின்றனர். தனது மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து வைக்க வேண்டும் என்ற முனைப்போடு ஐஷ்வர்யா லக்ஷ்மியின் தந்தை உள்ளார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் தனக்கு வரப்போகும் மனைவி தன்னைவிட படிப்பில் குறைந்தவளாகவும், முடி நீளமாகவும் இருக்கவேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் விஷ்ணு விஷால் பெண் தேடி வருகிறார். எதிர்ப்பாரா வகையில் முனிஸ் காந்த், விஷ்ணு விஷாலை சந்திக்க தன் அண்ணன் மகளை பொய்சொல்லி அவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார்.

கணவருக்கு இவ்விஷயம் தெரியாமல் வாழ்ந்து வரும் ஐஷ்வர்யா ஒரு பிரச்சனையில் தன் கணவரை கொல்ல முயற்சிக்கும் வில்லனை, ஐஷ்வர்யா அடித்து தும்சம் செய்துவிடுகிறார். பின் உண்மை தெரியவர மனைவியை அவரின் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். அதனை தொடர்ந்து மீண்டுமாக குஸ்தியை கையிலெடுத்து ஒரு போட்டியில் சேருகிறார். இதனிடையில் ஐஷ்வர்யாவை வீழ்த்த தீவிர பயிற்சி எடுத்து அப்போட்டியில் விஷ்ணு விஷால் பங்கேற்கிறார். கடைசியில் தனது மனைவியை போட்டியில் வென்றாரா..? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா..? இறுதியில் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை ஆகும்.

கபடிவீரர், கட்டா குஸ்தி வீரர் என பல்வேறு பரிணாமங்களில் வரும் விஷ்ணு விஷால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் கைத்தட்டலை பெறுகிறார். திருமணத்துக்கு பின் வரும் காட்சிகளில் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி ஐஸ்வர்யா  அசத்தியிருக்கிறார். முனிஸ்காந்த், கருணாஸ், காளிவெங்கட், ரெடிங் கிங்ஸ்லி என அனைவரும் அவர்களுடைய பணியை அழகாக செய்து உள்ளனர். அத்துடன் காமெடி, ஆக்ஷன், எமோஷ்னல் என அனைத்தையும் கொடுத்து ரசிகர்களை கவர நினைத்து வெற்றி பெற்று உள்ளார் டிரைக்டர் செல்லா அய்யாவு. முதல் பாதி முழுக்க கலகலப்பாக கொண்டு சென்று 2ஆம் பாதியில் உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை தக்க வைத்துள்ளார். அதேபோல் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்தை மெருகேற்றி இருக்கிறது. மேலும் ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையானது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

Categories

Tech |