Categories
லைப் ஸ்டைல்

கட்டிகள், வாய்ப்புண், தலைவலி குணமாக….. இதோ எளிய பாட்டி வைத்தியம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி கட்டிகள் மற்றும் வாய்ப்புண் குணமாக எளிய பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. நறுமணம் வீசும் திருநீற்று பச்சிலை செடியின் இலைகளை அரைத்து கட்டிகள் மீது பூசினால் உடனே கட்டிகள் கரையும். இதன் இலைகளை வெறுமனே முகர்ந்தால் அல்லது நீரில் போட்டு கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் தலைவலி, ரத்த அழுத்தம், அதீத இதயத்துடிப்பை மற்றும் தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகள் சரியாகும். இதன் இலையை மென்று சாப்பிட்டால் விரைவில் வாய்ப்புண் குணமாகும்.

Categories

Tech |