Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டிடங்கள் கட்டுவதில் சிக்கல்…. பயனற்று கிடக்கும் நீர்தொட்டி…. பெற்றோரின் கோரிக்கை…!!

பயனற்று கிடக்கும் நீர் தொட்டியை அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் 1-ஆம் மையில் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பள்ளி வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தரைத்தள குடிநீர் தேக்க தொட்டி எந்தவித பயனும் இன்றி காணப்படுகிறது. இதனால் அங்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்காக பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் போதிய இடவசதி இல்லாததால் அந்த திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். எனவே பயனற்று கிடக்கும் நீர்த்தேக்க தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |