நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அனைத்து அரசு நிறுவனங்களும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர்,தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும் ஆனந்தமாகவும் கொண்டாடும் வகையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் மற்றும் கட்டிட தொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்படும். ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வேஷ்டி சேலைக்கு பதிலாக அவரவர் வங்கிக் கணக்கில் 500 ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலமாக புதுச்சேரியில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் பயனாளிகள் பயன் பெறுவர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.