Categories
மாநில செய்திகள்

“கட்டிட கழிவு வழக்கு”…. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு…..!!!!!!!

சென்னை மாம்பலம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளால் மழைநீர் தேங்கி, வெள்ளம் பெருக்கெடுத்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேறாதது குறித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் சென்னை மாம்பலம் கால்வாயில் கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான செலவுகளை ஸ்மார்ட்சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கால்வாயில் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டதால் தண்ணீர் எதிர் வாங்கியதாக சென்னை மாநகராட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் தியாகநகர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, மேற்கு மாம்பலம், சிஐடி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழைநீர் வெளியேறாதது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு பிப்ரவரி 28க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |