Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டிட தொழிலாளியை நம்பி “ரூ.40 1/4 லட்சத்தை இழந்த நபர்”…. 4 பேருக்கு வலைவீச்சு…. பரபரப்பு சம்பவம்….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாடன்பிள்ளை தர்மம்அம்மன் கோவில் வடக்கு தெருவில் பிரபாகரன் என்பவர் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராபின்சன் என்பவர் அறிமுகம் ஆனார். இந்நிலையில் ராபின்சன், ராஜசேகர், அவரது தந்தை கொளஞ்சி, வீரமுத்து, கவிதா ஆகியோர் இணைந்து உங்கள் கடையை பெரிய கடையாக மாற்ற வங்கியில் 3 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகவும், 35 சதவீதம் மானியம் கிடைக்கும் எனவும் பிரபாகரனிடம் கூறியுள்ளனர். அதற்கு முதற்கட்டமாக  75 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி பிரபாகரன் பல்வேறு தவணைகளாக 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை 40 லட்சத்து 27 ஆயிரத்து 104 ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி வங்கியில் கடன் வாங்கி கொடுக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரபாகரன் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கட்டிட தொழிலாளியான ராபின்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |