சேலம் ஆத்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் தெற்கு உடையார்பாளைத்தில் உள்ள வீர முத்துமாரியப்பன் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் வாகனங்களை வாங்கி விற்பனை தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்கு முடிவு செய்து, பழைய வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டார். பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீட்டை ராஜா என்ற ஒப்பந்ததரர் கண்காணித்து வந்தார்.
வடக்கு உடையார் பாளைய பகுதியை சேர்ந்த 55 வயதான புஷ்பா மற்றும் , நேரு நகரை சேர்ந்த 28 வயதான சபி என்பவரும் வீடு கட்டிட பணியை தொடங்குவதற்காக,பழைய வீட்டின் கட்டுமான பணிக்காக வேலையை செய்துகொண்டிருந்தனர் . இதற்காக வீட்டின் பழைய சுவரை உடைத்த போது ,எதிர்பாராத விதமாக அருகே இருந்த சுவர் இடித்து விழுந்து தரைமட்டமானது. தரைமட்டமான சுவரானது வேலை செய்துகொண்டிருந்த புஷ்பாவின் மீதுவிழுந்ததில், மூச்சுத்திணறல் காரணமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .
இதை அறிந்த அப்பகுதி மக்கள் இடிபாட்டில் சிக்கிய பெண்ணின் உடலை 2 மணி நேரமாக தொடர்ந்து முயற்சி செய்து எடுத்தனர் . இது தொடர்பான செய்தியை கேட்ட , ஆத்தூர் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் அவருடன் பணியில் இருந்த போலீசார் ஆகியோர் விரைந்து விபத்து நடந்த பகுதிக்கு சென்று இறந்த புஷ்பாவின் உடலை மீ ட்டு உடற்கூ று ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .ஆத்தூர் தாசில்தார் அன்புசெழியன் விபத்து நடந்த இடத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்களை கேட்டறிந்தார் .இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .