Categories
தேசிய செய்திகள்

கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டிய ஜோடி…. வெளியான வைரல் வீடியோ…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் கட்டிப்பிடித்தபடி ஒரு ஜோடி பைக் ஓட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியது. இந்த வீடியோவை அவ்வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் படம் பிடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, சம்மந்தப்பட்ட அந்த ஜோடி அஜய்குமார்(22), கே.ஷைலஜா (19) ஆகியோரை கைது செய்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் 2 பேரின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை குடிமக்கள் கடைபிடிப்பது அவசியமென்று மாநகர காவல் ஆணையர் சி.எச்.ஸ்ரீகாந்த் தெரிவித்து உள்ளார். அத்துடன் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து இருக்கிறார்.

Categories

Tech |