Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டிப் பெத்தாருக்கு ஆயிரம் முத்தங்கள் – நடிகர் சூரி டுவிட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2வதாக மகன் பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக என்று டுவிட் செய்திருந்தார். இதற்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், “தந்தைக்கு மகன் கிடைப்பது பிறப்பு… தந்தையே மகனாக  கிடைப்பது சிறப்பு …!எங்க வீட்டுப் பிள்ளைக்கு, கட்டிப்பெத்தாருக்கு ஆயிரம் முத்தங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |