திருவள்ளூர் மாவட்டம் இடையூர் -கலியனுரை இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் முழுவதும் மேம்பாலம் கட்டி முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளார்கள்.
பாலம் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளதால் ஆபத்தான முறையில் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி ஏணி மூலமாக பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.