Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டுக்கடங்காத காளைகள்…. அடக்க முயன்ற வீரர்கள்…. சிறப்பாக நடந்த நிகழ்ச்சி….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காயமடைந்த 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குள்ளம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதுபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 16- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

இந்நிலையில் காளைகள் தாக்கியதால் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காளைகளை அடக்கி வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள், ரொக்கம் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |