கொரோனா நோய் தொற்றினால் மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர்.
வட கொரியா நாட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று முதல்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் தீவிரமாக பரவியதில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 560 பேருக்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக வட கொரிய அரசு செய்தி ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்திலிருந்து பலருக்கும் காய்ச்சல் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சரியாக எத்தனை பேர் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.