Categories
உலக செய்திகள்

கட்டுக்கட்டாக பணம் மற்றும் போதை பொருட்கள் பதுக்கல்… சோதனை மேற்கொண்ட போலீஸார்… இரு நபர்கள் கைது..!!

லண்டனில் இரு நபர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனையிட்டதில், பணம் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

Jody Hall(46) மற்றும் Harry El Araby(33) என்ற இரு நபர்களுக்கும் Woolwich Crown நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் jody மற்றும் Harry ஆகிய இருவரின் வீட்டிலும் துப்பாக்கிகள், போதை மருந்துகள் மற்றும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் jody என்பவர் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் அவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில், Harry என்ற நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,” கடந்த மே மாதம் சந்தேகத்தின் அடிப்படையில் Jody யை பின் தொடர்ந்து சென்றோம். அப்போது Jody மற்றும் harry இருவரும் சந்தித்து பேசியபடி போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கை மாற்றிக்கொண்டனர். அதன்பின் அவர்கள் இருவரையும் கைது செய்து வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 14,000 டாலர்  மதிப்புள்ள பணம் மற்றும் போதை மருந்துகள், வெடிமருந்துகள் துப்பாக்கிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தோம். இதேபோல் லண்டனில் ஆபத்தான ஆயுதங்கள் சட்டவிரோத போதைப் பொருட்கள் அதன் மூலம் பெறப்பட்ட பணம் போன்றவற்றை அகற்றுவதற்கான முழு முயற்சியில் தொடர்ந்து செயல்படுவோம்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |