திருமணமாகி 15 நாட்களில் காதலனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு 15 நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திடீரென்று மாமியார் வீட்டில் இருந்த அந்த பெண்ணை காணவில்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருந்து 50 சவரன் நகை மற்றும் காரை எடுத்துக் கொண்டு அந்தப் பெண் வெளியில் சென்றிருக்கிறார். அத்துடன் அந்த பெண் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பதறியடித்துக் கொண்டு வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய ஆரம்பித்தன. அந்த பெண் எஸ்பிஐ வங்கியில் கலெக்சன் ஆபீஸராக வேலை பார்த்தபோது அங்கு பணியாற்றிய நண்பர் உடன் காதல் ஏற்பட்டதும், அவருடன் ஓடிப் போனது தெரியவந்தது. இதையடுத்து இந்த ஜோடியை பல இடங்களில் தேடிய போலீசார் இறுதியில் கண்டுபிடித்து காதலனையும் அந்த பெண்ணையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின்னர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள் அந்தப் பெண்ணை அழைத்தபோது தான் தன் குடும்பத்துடன் செல்ல விரும்பவில்லை என்றும், காதலனுடனேயே வாழ விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணின் பெற்றோருக்கு ஏற்கனவே இவர்கள் காதலித்து வந்த விவகாரம் தெரியும் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் அவசர அவசரமாக வேறு ஒருவருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்தை செய்து வைத்தது தெரியவந்தது. ஆனால் பெண்ணின் பெற்றோர் நகைகளும் பணமும் கையில் வருவதற்காக இத்தனை நாள் காத்திருந்து விட்டு தற்போது இரண்டு பேரும் ஓடிப்போய் உள்ளனர் என்று குற்றம் சாட்டி இருந்துள்ளனர். இதை கேட்ட அந்த பெண் தனது நகைகள் அத்தனையும் கழட்டி குடும்பத்தினரிடம் தந்துவிட்டு, காதலனுடனேயே சென்றுவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.