மேல்மலையனூருக்கு சாமி தரிசனத்துக்காக வந்த தம்பதிகளின் வாடகை கார் விபத்துக்குள்ளாகியதில் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே நகரை பகுதியை சேர்ந்தவர்கள் விஜயராகவன், மல்லிகா தம்பதியினர். இந்த தம்பதியினர் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக வாடகை காரில் புறப்பட்டுள்ளனர்.
அவர்கள் வந்த காரை சென்னையிலுள்ள ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 51 வயதான அசோக் குமார் என்ற நபர் ஓட்டி வந்துள்ளர். இந்நிலையில் மேல்மலையனூர் பகுதியிலிருக்கும் வணக்கம்பாடியியில் வநகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மற்றொரு காரின் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே காரின் ஓட்டுனர் அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருடன் வந்த விஜயராகவன் மல்லிகா மற்றொரு காரில் வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 1குழந்தை உட்பட 3 நபர்களும் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த வளத்தி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதைதொடர்ந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த விபத்தில் பலியான காரின் ஓட்டுனர் அசோக்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததோடு இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.