சரக்கு லாரி கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் டிரைவர் உள்பட 2 பேர் காயங்களின்றி உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள சர்க்கரைபட்டியில் நெல்சன் பிரபு என்பவர் வசித்து வருகிறார். சரக்கு லாரி டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரும் சம்பவத்தன்று காலியான கியாஸ் சிலிண்டர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கொல்லிமலை அடிவாரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 1-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற பொது லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து தரைப்பாலம் அருகே இருந்த தடுப்பு சுவர் மீது மோதியது.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக டிரைவர் நெல்சன் பிரபு மற்றும் பிரேம்குமாரை மீட்டர். இதில் அதிஷ்டவசமாக இருவரும் காயங்களின்றி உயிர் தப்பினர். இதன்பிறகு பொக்லைன் இயந்திரம் மூலம் சரக்கு லாரியை மீட்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.