Categories
மாவட்ட செய்திகள் விபத்து விருதுநகர்

கட்டுப்பாடில்லாமல் ஓடிய வாகனம்…! பின்னர் நடந்த அதிர்ச்சி… விருதுநகரில் சோகம் ..!!

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மூதாட்டியின் மீது ஏறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் சீனியம்மாள், இவரது கணவர் வீரப்பெருமாள் வயது 80. இவர்கள் சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். சீனியம்மாள் அவரது வீட்டின் வேலைகளை முடித்துவிட்டு தனது வீட்டின் முன்பு அமர்ந்து அவரது கணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியாக வந்த வாகனம் சீனியம்மாள் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த வாகனத்தின் ஓட்டுனரை விசாரித்ததில் அவரது கவனக்குறைவால் கார் கட்டுப்பாட்டை இழந்தது என அவர் தெரிவித்தார். பின்பு அவரை காவல்துறையினர் கைது செய்து சீனியம்மாள் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |