நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் விநாயகர் சிலைகளை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.