Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாடு இன்றி கடன் வாங்கும் மாநிலங்கள்…. வருத்தம் தெரிவித்த மத்திய நிதியமைச்சர்….!!!!

ஆா்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த முதுபெரும் தலைவா் பி.பரமேஸ்வரன் நினைவாக “கூட்டாட்சி அமைப்புமுறை: தற்சாா்பு இந்தியாவை நோக்கிய பாதை” எனும் தலைப்பில் கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இவற்றில் மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது, தங்களுடைய சக்தியை மீறி கடன் வாங்கவேண்டும் என்ற மாநிலங்களின் எண்ணமானது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கூடுதல் சுமைக்கு வழிவகுக்கும்.

அதாவது குறிப்பிட்ட சில மாநிலங்களானது கட்டுப்பாடு இன்றி கடன் வாங்குவதுடன், முறையற்ற செலவினங்களை அதிகம் மேற்கொள்வது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இவ்வாறு மாநிலங்களின் கடன்கள் குறித்து அரசியலமைப்பின் சட்டப்படி மத்திய அரசானது விவாதிக்க மற்றும் கேள்விகளை எழுப்ப முடியும்.

எனினும் தங்களின் அதிகாரத்துக்குள் மத்திய அரசு தலையிடுவதாக அவை கருதுகிறது. மத்திய- மாநில அரசுகளின் உறவுகளை சீா்கெடச் செய்யும் நோக்கில் சில தவறான அரசியல் கட்டுக் கதைகள் பரப்பப்படுகிறது. கூட்டாட்சி உறவானது, ஒத்துழைப்பு, கூட்டுத்தன்மை, ஒருங்கிணைப்பு ஆகிய 3 அம்சங்களால் நிா்வகிக்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.

 

Categories

Tech |