திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 8 பறக்கும் படைகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 பறக்கும் படைகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர 16 வீடியோ கூர்ந்தாய்வுக்குழுக்கள், 24 நிலையான கூர்ந்தாய்வுக்குழுக்கள் உள்ளன. இந்த குழுவினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருள் மற்றும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் வந்து குவிகின்றனர். இதையடுத்து கூடுதலாக 8-ம் பறக்கும் படைகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு பறக்கும் படைகள் மலை கிராமங்கள் நிறைந்த பழனிக்கும், ஒரு பறக்கும் படை ஆறு தொகுதிகளுக்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில பகுதிகளை இலக்காக வைத்து இந்த பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.