Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்… கண்காணிப்பில் சிக்கிய தி.மு.க.வினர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்த தி.மு.க.வினர் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெய்குப்பை கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நெய்குப்பை கிராமத்திற்கு பறக்கும் படை தாசில்தார் முத்துக்குமார் தலைவியான குழுவினர் விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த 2 பேரை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர்கள் நெய்குப்பையை சேர்ந்த ரவி, சிலம்பரசன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூ. 27 ஆயிரத்து 430 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வி.களத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு பேரையும் ஒப்படைத்தனர். இதுகுறித்து 2 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர். அதன் பின் அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

Categories

Tech |