காஞ்சிபுரத்தில் கம்பியை ஏற்றிச்சென்ற வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் இருவர் காயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் நேற்று கம்பியை ஏற்றி கொண்டுச் சென்ற வேன் சிங்கப்பெருமால் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் வேன் வல்லக்கோட்டை அருகே செல்லும் போது ஓட்டுனரை மீறி நிலைதடுமாறியுள்ளது. இதனால் வண்டி ரோட்டின் மீது வைக்கப்பட்டிருக்கும் தடுப்பில் மோதியதோடு மட்டுமல்லாமல் முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீதும் மோதியது.
இதனால் வேன் சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த கம்பிகள் காரின் மீது பட்டு பின்புற கண்ணாடிகள் சிதறியது . மேலும் வேன் மற்றும் காரின் டிரைவர்கள் இருவருக்கும் பலத்த காயமடைந்ததை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தினால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து காவலர்கள் விசாரணைை செய்து கிரேன் மூலம் வண்டியை அப்புறப்படுத்தினர்.