தாறுமாறாக ஓடிய ஆட்டோ கார் மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் நேற்று முன்தினம் திண்டிவனத்தை நோக்கி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலை ஓரம் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 2 பேர் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரான பெலாகுப்பம் பகுதியில் வசித்த அபிமன்னன் என்பவரை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்தார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இரண்டு பேரும் அங்கிருந்து காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து ரோசணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.