தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள சோமங்கலம் செங்குந்தர் தெருவில் வசித்து வருபவர் 42 வயதுடைய சங்கரலிங்கம். இவர் ஆம்பூரை நோக்கி தனது ஏழு வயது மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி எஸ்.என் பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் செல்லும்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் சென்ற சங்கரலிங்கம் மற்றும் அவரது மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து நடந்த சத்ததை கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை காரில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை அறிந்த பள்ளிகொண்டா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.