Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மீது மோதிய கார்”… ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு…!!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவற்றின் மீது மோதியதால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதுடைய ரவிதேஜா. இவரும், சென்னை ஐயப்பன்தாங்கல் பெரியகுளத்துவான் சேரி பகுதியை சேர்ந்த செல்லப்பா மற்றும் அவருடைய மகன் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் ஒரே காரில் சென்னை நோக்கி திருச்சி வழியாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.

இதனால் திருச்சி பால்பண்ணை நான்கு வழி சாலையில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் ரவிதேஜா மட்டும் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்

Categories

Tech |