சங்ககிரி வழியே சென்று கொண்டிருந்த பேருந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக ஈரோடுக்கு நேற்று மதியம் 1.30அளவில் தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த அந்த பேருந்தை வெற்றிவேல் என்பவர் ஓட்டினார். அப்பேருந்து சங்ககிரி அக்கமாபேட்டை பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் இடது புறம் சிறிய பாலம் அருகே நின்ற தென்னை மரம் மீது மோதி அருகிலிரந்த 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.
அந்த பேருந்தில் பயணம் செய்த சங்ககிரி பழைய எடப்பாடி ரோட்டில் வசித்து வந்த கணேசன் என்ற இசைக்கலைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். . இந்த விபத்து குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.