Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள ஊட்டியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் சுற்றுலா பயணிகளின் கார் கூடலூர் பகுதியில் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது.

இந்நிலையில் ஊட்டியிலிருந்து வந்த சுற்றுலா பயணிகளின் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து கார் பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதையில் ஏறி நின்றது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  காவல்துறையினர் விபத்தில் சிக்கிய காரை அகற்றினர். மேலும் மக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |