திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கேரள அரசு பேருந்து நெய்யாற்றின் கரை அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. திடீரென கடைக்குள் புகுந்து பேருந்து கவிழ்ந்தது. அந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று கேரள அரசு பேருந்து ஒன்று அதிக அளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது.
அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக உள்ள கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. அந்தக் கோர விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த கடைக்கு விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த கோர விபத்து காரணமாக நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு உயிர்சேதம் ஏற்படாததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது