Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து…. கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காலை 4 மணி அளவில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. எதிரே வந்த வாகனத்திற்கு டிரைவர் வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்துக்குள் பாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு எடுத்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். அதோடு பஸ்ஸில் இருந்த 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 22 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் சேலம்-சென்னை புறவழிச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.” என அவர் கூறினார்

Categories

Tech |