ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் திருவள்ளூர் குறிஞ்சியை சேர்ந்தவர் சரிதா (வயது 31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து டிரைவராக வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் திட்டக்குடி வட்டம் கழுத்துரர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று ஆட்டோவில் அவரது உறவினர்களான புவனேஸ்வரி 40, நவீன் 20 ஆகியோரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது வாலிகண்டபுரம் கருப்பசாமி கோவில் அருகில் சென்ற பொழுது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் புவனேஸ்வரி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு காயம் அடைந்த நவீன் மற்றும் சரிதா ஆகிய இருவரும் சிகிச்சை- க்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் . இதுபற்றி மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.