திண்டுக்கல் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருக்கிறார். சம்பவத்தன்று தவமணி திண்டுக்கல்லுக்கு தனது மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். காரை தவமணி ஓடியுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கல்லாத்துப்பெட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன்பின் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் கார் வேகமாக மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் காரினுள் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தவமணியையும், அவரது குடும்பத்தினரையும் மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
குப்புற கவிழ்ந்ததில் கார் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.