கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள செட்டி மேம்பாலத்தில் உள்ள சாலையில், தமிழக பதிவு எண் கொண்ட ஒரு பைக்கானது இரவு ஓசூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆண் மற்றும் பெண் என அந்தப் பைக்கில் இருவர் பயணித்து வந்தனர். இந்நிலையில் பைக்கின் பின்னால் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று வேகமாக மோதியது. அதனால் கட்டுப்பாட்டை இழந்த பைக்கானது மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் பைக்கில் இருந்த இருவரும் 40 அடி கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இவ்விபத்தால் அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் பைக் தமிழக பதிவெண்ணை கொண்டதால் அவர்கள் யார்? என்பதை பற்றி நடந்த விசாரணையில், அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்தம் மற்றும் ஸ்ருதிக்கா என்பது தெரியவந்துள்ளது.
CCTV capture of the incident in which two fell from the Electronic City Flyover after a car hit them on Tuesday night. Both died on the spot while car driver sustained injuries @XpressBengaluru @ManjuS_TNIE @NewIndianXpress pic.twitter.com/DRcTSu8M0y
— MG Chetan (@mg_chetan) September 15, 2021