கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் நீதிபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் மாலா என்பவர் இன்று காலை 10 மணி அளவில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கங்கா பவானி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் நீதிபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு நீதிபதி வீடு திரும்பினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.