கட்டுப்பாட்டை இழந்த கார் குடிசை வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டணம் பகுதியில் இருந்து ஒரு கார் ராசிபுரம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த காரை கிஷோர் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சக்தி நகர் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வீரன் என்பவரது குடிசை வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்த கிஷோர் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.