கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் மேடான இடத்தில் ஏறி மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார். மேலும் வாகனத்தின் முன்புறமும், பின்புறமும் சேதமடைந்தது. இதுகுறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.