கட்டுப்பாட்டை இழந்த அரசு பெயரில் மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டத்திலுள்ள மேலவெளி வீதியில் ரோட்டில் அரசு டவுன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் மின்கம்பம் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர்.