Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. மின் கம்பத்தில் மோதி விபத்து…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பெட்டவாய்த்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகே சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் ஒரு சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Categories

Tech |