பயங்கர விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சென்ராயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இவருடன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி மனோஜ் குமார் என்பவரும் சென்றுள்ளார்.
இவர்கள் 2 பேரும் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது தாமரைக்குளம் பகுதியில் திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு ஹெல்மெட் அணிந்திருந்ததால் சென்ராயன் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
இது தொடர்பாக கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மனோஜ் குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.