Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. உடல் நசுங்கி பலியான தூய்மை பணியாளர்…. சென்னையில் கோர விபத்து…!!

கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில்  தூய்மை பணியாளர் உடல் நசுங்கி பலியான நிலையில் மற்றோருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சன்னை மாவட்டத்தில் உள்ள  திருவெற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட மணலி விரைவு சாலையோர பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் எர்ணாவூரிலிருந்து சத்தியமூர்த்தி நகர் நோக்கி வேகமாக சென்ற கன்டெய்னர் லாரி திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி  உள்ளது. அதன் பின்னர்  கன்டெய்னர் லாரி தூய்மை  பணியாளர்கள் மீது பலமாக  மோதிவிட்டது. இந்த விபத்தில்  36 வயதான நிர்மலா என்ற பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

மேலும் லாரியின் சக்கரம் கால் மீது ஏறி இறங்கியதால் வலிதாங்க முடியாமல் ரதி அம்மாள் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அருகில் இருத்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு காவல்துறையினர் தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |