லாரி ஊரணியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர் பகுதியிலிருந்து 320 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தளவாய்புரம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கண்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஆவுடையானுர் ஊருணி கரைக்கு வடபகுதியில் இருக்கும் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி ஊரணிக்குள் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் கண்ணனும் சுமைதூக்கும் தொழிலாளர்களும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பி விட்டனர். ஆனால் 4 1/2 லட்ச ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் தண்ணீரில் மூழ்கியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.