கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலத்தில் இருந்து மணல் லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கெம்பநாயக்கன்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வணிக வளாக சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அங்கிருந்த மின்கம்பங்கள் மற்றும் வணிக வளாக சுற்று சுவர் ஆகியவை சேதமடைந்தன.
இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.